நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிச்சர்ட் உம்பிராண்டு என்பவர் ஆண்டவர் மீது பக்தி கொண்டவர். அவரை பற்றி மக்கள் மத்தியில் பேசக் கூடாது என எதிரிகள் அவரை எச்சரித்தனர்.
அதற்கு அவரோ, 'மனதில் எரியும் பக்தி என்னும் தீயை அணைக்க முடியாது' என தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை சித்ரவதை செய்தும், உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும் துன்பப்படுத்தினர். எதற்கும் அவர் மசியவில்லை.
சில நாட்கள் கழித்து அவரை விடுவித்தனர். இது பற்றி அவரது நண்பர், “அவரை பற்றி பேசாமல் இருந்தால் சித்ரவதை அனுபவிக்க நேர்ந்திருக்காதே'' எனக் கேட்டார். “எனக்குள் அவர் மீது நேச அக்னி எரிகிறது. அதை யாராலும் அணைக்க முடியாது” என பதிலளித்தார்.
மனஉறுதி அதிகம் உள்ளவருக்கு சோதனையும் அதிகம் வரும்.