நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோடி மான்கள் தாகம் தீர ஒரு ஓடைக்கு சென்றன. அங்கு சிறிதளவே தண்ணீர் இருந்தது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்க நினைத்து குடிப்பது போல் பாசாங்கு செய்தன. நாவறட்சியால் உயிர் விட்டாலும் பரவாயில்லை; தன் கூட வந்த மானின் தாகம் தீர வேண்டும் என இரு மான்களும் தன் மனதிற்குள் நினைத்தன. அந்த மான்களின் அன்புக்கு சாட்சியாக திடீரென மழை பொழியவே அதன் தாகம் தீர்ந்தது. 'ஒருவன் தன் சினேகிதனுக்காக ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமானது எங்குமில்லை'.