நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்தடியில் துாங்கிய நாய் ஒன்றை உணவாக்க ஓநாய் முயன்றது. தப்பிக்க எண்ணிய நாய், 'நான் எலும்பும் தோலுமாக உள்ளேன். என் எஜமான் வீட்டில் விருந்து நடக்க உள்ளது. அதில் சாப்பிட்டு வந்த பிறகு என்னை உணவாக்கிக் கொள்' என்றது.
ஓநாயும் சம்மதித்தது. பிறகு நாயை பிடிக்க வந்தது ஓநாய். வீட்டுக் கூரையின் மீதேறிய நாய், 'கவனக்குறைவால் உன்னிடம் சிக்கிக் கொண்டேன். இனி மரத்தடியில் துாங்க மாட்டேன்' எனச் சொல்லி சிரித்தது.