நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீண்டு உயர்ந்து நிற்கும் மரம் அது. அதன் அருகே புதர்கள் மண்டி கிடந்தன. அதனால் மரத்தின் மீது பறவைகள் கூடு கட்டி வாழ்ந்தன. நம்மால் தான் இந்த பறவைகள் வாழ்கின்றன என கர்வம் கொண்டது அந்த மரம்.
இந்நிலையில் ஒருநாள் மரத்தின் அடியில் கருநாகம் ஒன்று குடிபுகுந்தது. அதன்பின் உயிருக்கு அஞ்சி பறவைகள், விலங்குகள் யாரும் மரத்தின் அருகில் வருவதில்லை. கலகலப்பாக இருந்த காலம் மீண்டும் வராதா என தனிமையை எண்ணி வருந்தியது மரம். இப்படித்தான் மனிதர்களில் சிலர் உற்றார் உறவினரை புறக்கணித்து விட்டு தனிமையில் வாடுகிறார்கள்.