ADDED : அக் 17, 2024 10:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நார்வே நாட்டின் மன்னரானார் ஓலப். அவர் சிறு வயது முதல் ஆண்டவருக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். அரண்மனை செல்வம் முழுவதையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். ஆண்டவரின் புகழைப் பரப்ப, பல நாடுகளில் இருந்து பல குழுவினர்களை வரவழைத்தார். தேவாலயங்களைக் கட்டினார். இவருக்கு ஏற்பட்ட புகழினை கண்டு எதிரிகள் சதியில் ஈடுபட்டு பதவியில் இருந்து விலக செய்தனர்.
மன்னரின் உரிமைகள் பறிக்கப்பட்டன சிறைக்கைதியானார். துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். நல்லவனாக இருப்பவன் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்கிறது தேவமொழி.