நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருவில் நின்றபடி மனைவியும், கணவனும் மாறி மாறி ஒருவர் குறையை மற்றொருவர் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் மரக்கட்டையால் மனைவியைத் தாக்கினார் கணவர். அதைக் கண்ட பெரியவர் ஒருவர், 'தயவு செய்து சண்டையை கைவிடுங்கள். ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசினால் பிரச்னை தீரும். பாவம் உங்களுடைய குழந்தைகள் செய்வதறியாமல் அழுவதைப் பாருங்கள். அவர்களின் எதிர்காலம் கருதியாவது சமாதானத்தை கடைபிடியுங்கள்'' என்றார்.