
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மற்றவர் தன்னை உயர்வாக மதிக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அதே நேரத்தில் பிறர் தவறாக ஒரு வார்த்தை சொன்னால் போதும் கோபத்திற்கு ஆளாகின்றனர். மற்றவர்களின் கருத்தையோ, வழிகாட்டுதலையோ ஏற்க மறுக்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கவும் பொறுமை இருப்பதில்லை.
எதிலும் நிதானம் இல்லாமல் அவசரபுத்தியுடன் செயல்படுகின்றனர். 'எல்லா செயல்களையும் நான் சரியாகச் செய்கிறேன். மற்றவர் தான் சரியில்லை' என கருதுகிறார்கள். இதை திருத்திக் கொள்ளாவிட்டால் வாழ்வு சுமையாகும். மனதை உற்றுக் கவனித்தால் பிரச்னை எல்லாம் ஓடி விடும்