நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி வந்தவுடன் பெற்றோர் உள்பட அனைவரையும் சிலர் கைவிட்டு விடுகின்றனர். பின்னர் சுயநலத்திற்காக பெற்றோரை பயன்படுத்தி விட்டு நன்றி இல்லாமல் நடக்கிறார்கள்.
'இந்த மாதம் அம்மா, அப்பா என்னுடன் இருக்கட்டும். அடுத்த மாதம் தம்பி நீ பார்த்துக்கொள்' என சகோதரரிடம் சண்டையிடுகிறார்கள். 'உணவிற்காக பெற்றோரை இப்படி அலைக்கழிக்கலாமா.. அவர்கள் மனம் என்ன பாடுபடும்' என நினைப்பதில்லை.
பெற்றோர்கள் முதுமையில் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டுமே. வயதான காலத்தில் குழந்தைகளைப் போல பெற்றோர் மாறிவிடுகின்றனர். அவர்களை காப்பது நம் கடமை.