நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்றாக படித்தும் தேர்வில் தோல்வி அடைந்தான் டேனியல். கடற்கரையில் சோகமாக நடந்தான். இரண்டு குழந்தைகள் மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தன. திடீரென வந்த அலை மணல் வீட்டை சரித்தது. அதைப் பார்த்து குழந்தைகள் அழப் போகின்றன என நினைத்தான். ஆனால் அப்படி நடக்கவில்லை. குழந்தைகள் சிரித்தபடி ஓடிச் சென்று வேறொரு இடத்தில் வீடு கட்ட தொடங்கினர். அதைப் பார்த்து மிரண்டு போனான். மீண்டும் படிக்கத் தயாரானான் டேனியல்.