
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டவரை மகிழ்விப்பது எப்படி என அறிஞர் ஒருவரிடம் ஏழை கேட்க, 'பசித்தவனுக்கு உணவு கொடுத்தால் மகிழ்வார்' என்றார் அறிஞர். 'எனக்கே பசிக்கிறது; நான் எப்படி மற்றவர் பசியை போக்குவேன்' என தன் நிலைமையைச் சொன்னார்.
'உன் பசியை அடக்கி கொண்டு மற்றவர் பசியை போக்க நினை. உன் அருகில் அவர் வருவார்' எனச் சொல்லி தன்னிடம் இருந்த பழங்களை ஏழைக்கு கொடுத்தார் அறிஞர். சொல்வது எளிது; செய்வது கடினம்.