நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமியைத் தோண்டினால் தண்ணீர். சுரங்கத்தை தோண்டினால் கனிம வளம். துன்பமே செய்தாலும் பூமி நமக்கு நன்மையே செய்கிறது. இது போலத்தான் பெண் என்பவள் இருக்கிறாள். துன்பங்களை பொறுத்துக் கொண்டு குடும்பத்திற்கு, சமூகத்திற்கு நன்மை செய்கிறாள்.
நல்ல குழந்தைகளை உருவாக்குபவளும் அவளே. நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகிறாள். சுயநலம் இல்லாமல் கணவனுக்காவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தன்னை அர்ப்பணிக்கிறாள். தன்னைப் போலவே பெண்களை படைத்தார் ஆண்டவர் என்கிறது பைபிள்.