நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழம் ஒன்று பழுத்து மரத்தில் இருந்து விழுந்தது. மண்ணில் புதைந்த பழம், இருளில் கிடந்த போது தனக்குள், 'தாய் மரத்தில் பாதுகாப்பாக இருந்த நான் எப்படி வளரப் போகிறேன்?' என வருந்தியது. ஆனால் விதைக்குள் இருந்த உயிர்சக்தி அதை ஊக்கப்படுத்தியது. மண்ணைத் துளைத்து வெளி வந்து சூரிய ஒளியை நோக்கி முளைத்தது. காலப்போக்கில் தானும் ஒரு மரமாக மாறி நின்றது.
நம்மைச் சுற்றியுள்ள சூழல் கடினமாக மாறினாலும் நம்பிக்கை வெற்றிக்கு வழிகாட்டும்.