ADDED : பிப் 27, 2025 03:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு புலிக்குட்டி, தன் தாயைப் போல வேகமாக ஓட முடியவில்லையே என வருந்தியது.
''இப்போது நீ சிறியவனாக இருக்கிறாய். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நீயும் என்னைப் போல வேகமாக ஓடுவாய்' என்றது தாய்ப்புலி. தன் தாயின் வார்த்தைகளை நம்பி, தினமும் பயிற்சி செய்தது. நாளடைவில் அது வேகமாக ஓடத் தொடங்கியது.
யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். அதற்கான காலம் வரும் வரை காத்திருப்பது அவசியம்.