நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிதாக பணிக்கு வந்த அமலியிடம், பள்ளி விதிமுறைகளை விளக்கினார் தலைமை ஆசிரியை. பாடம் நடத்தும் முறை பற்றி விளக்கிய அவரின் பேச்சு அமலியை கவர்ந்தது.
* பாடம் தொடர்புடைய பழைய நினைவுகள், அதில் உள்ள நல்ல கருத்துக்கள், வாழ்வில் நடந்த சம்பவங்கள் என எல்லாம் கலந்து பாடம் எடுக்க வேண்டும்.
* மாணவர் நலனுக்கான விஷயங்களை மனதில் பதியுமாறு நடத்த வேண்டும்.
* ஆசிரியர்கள் எல்லாவற்றிலும் அறிவுப்பூர்வமாக இருக்க மாணவர்கள் விரும்புவர். அதை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன் என முடித்தார் தலைமை ஆசிரியை.
தான் நினைத்தபடியே ஆசிரியர் பணியில் சேர்ந்ததை எண்ணி ஆண்டவருக்கு நன்றி சொன்னாள் அமலி.