நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலர் கசங்கிய ஆடைகளை அணிந்து கொள்வார்கள். வசிக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள். அவர்களின் எண்ணம் நேர்மையானதாக இருக்கும். சிலர் இதற்கு மாறாக பொறாமை, வெறுப்பு, அற்ப எண்ணம் என கீழான குணங்களைக் கொண்டிருப்பர். ஆனால் பளிச்சென உடுத்திக் கொள்வர். ஆடம்பர வீட்டில் பகட்டாக வாழ்வர்.
'மனம், உடலால் துாய்மையாக இருக்க வேண்டும். இருப்பிடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவர்களே எனக்கு பிரியமானவர்கள்' என்கிறார் ஆண்டவர்.