நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலையில் நடைபயிற்சிக்காக புறப்பட்டான் மைக்கேல். அவனுக்கு முன்பாக நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை முந்த வேண்டும் என எண்ணத்தில் வேகமாக நடந்தான்.
அவருக்கும், அவனுக்கும் நுாறடி துாரம் தான் இருக்கும். ஓட்டம் பிடித்தான். அவரை வேகமாக கடந்து விட்டு, திரும்பி பார்த்தான். அவர் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக வந்து கொண்டிருந்தார். அவர் தன்னுடன் போட்டிக்கு வரவில்லை என்பதை உணர்ந்து வெட்கப்பட்டான் மைக்கேல்.
* மற்றவரை துரத்தி பிடிப்பதே வாழ்க்கை ஆகாது.
* ஒப்பிடும் குணத்தால் சொந்த வாழ்வை இழப்பீர்கள்.
* போட்டி மனப்பான்மை எதிரிகளை உருவாக்கும்.