நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடிமைத்தனத்தில் இருந்து யூதர்களை விடுவித்தவர் மோசே. அதன் அடிப்படையில் அவர்கள் கொண்டாடும் விழா பாஸ்கா. ஒருமுறை இயேசுவும், அவரது சீடர்களும் பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக கூடினர். அப்போது இயேசு செய்த செயல் ஆச்சரியத்தை உண்டாக்கியது. சாப்பிட்டு அமர்ந்ததும் சீடர்களின் கால்களை
தண்ணீரால் கழுவியதோடு இடுப்பில் கட்டிய துண்டை கழற்றி துடைத்தார் இயேசு. 'தாங்கள் இப்படி செய்வது சரிதானா' எனக் கேட்டார் சீடர் ஒருவர். அதற்கு அவர், 'முன்மாதிரியாக இருப்பவனே நல்ல தலைவனாக இருக்க முடியும்' என்றார்.