
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்கு நண்பர் பிலிப்புடன் செல்ல இருந்தார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். தன் வீட்டின் அருகிலுள்ள பூங்காவில் அவருக்காக காத்திருந்தார். வர தாமதமானதால் வருந்தினார் பிலிப். 'தாமதத்திற்காக வருத்தப்படாதீர்கள்' என்றார் ஐன்ஸ்டீன். ஆனாலும் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டேனே' என்றார் பிலிப்.
'நீங்கள் வரும் வரை ஆராய்ச்சி பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்' என்றார் ஐன்ஸ்டீன்.
குறிக்கோளை விட்டு வெற்றியாளர்கள் விலகுவதில்லை.