
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இமயமலையை அடுத்த காரகோரம் மலையை சேர்ந்த 'புருேஷா' இன மக்கள் இளமை மிக்கவர்கள். இவர்களின் மொழி புருஷாஸ்கி. மன்னர் அலெக்சாண்டர் இங்கு வந்த போது அவருடன் வந்த வீரர்கள் இங்கேயே தங்கி விட்டனர். அவர்களின் வம்சாவளியான இவர்கள் நுாறாண்டு காலம் வாழ்கிறார்கள். போர் வீரரான இவர்கள் காலப்போக்கில் அமைதியான குணம் கொண்டவர்களாகவும், விவசாயிகளாகவும் மாறினர். அன்றாட பணிகளை அதிகாலையில் தொடங்கும் இவர்கள் தயாரிக்கும் குங்குமப்பூ, ஏலக்காய், புதினா, வெல்லம் கலந்த தேநீர் மிகவும் சுவையானது. நல்லவர் நலமுடன் வாழ்வர் என்பது உண்மை.