நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் ஏற்பட்டால் துள்ளிக் குதிக்கவும், துன்பம் ஏற்பட்டால் துவண்டு போவதும் இயல்பு.
ஆனால் புத்திசாலி இரண்டையும் சமமாக கருதுவான். ஆனால் இன்பத்தில் மகிழ்ச்சியும், துன்பத்தால் வேதனையும் ஏற்படுவதை மறுக்க முடியாது. துன்ப அனுபவம் ஏற்படாவிட்டால் இன்பத்தை மனிதன் ரசிக்க முடியாது. துன்பத்தை துணிவுடன் எதிர்கொண்டால் மனம் உறுதி பெறும். பொறுமை, தியாகம் போன்ற நற்பண்புகள் வளரும்.
இன்பத்தின் முடிவு துன்பம். துன்பத்தின் முடிவு இன்பம். இதை உணர்ந்தவனே ஞானி.