
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறக்கும் தருவாயில் அலெக்சாண்டர் தன் படைத்தளபதியை அழைத்தார். ''இந்த உலகையே என் காலடியில் கொண்டு வந்ததாக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இறக்கப் போகும் இந்த நேரத்தில் மூன்று விஷயங்களை உலகிற்கு தெரிவிக்க விரும்புகிறேன். இறப்பை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை. எதையும் மனிதன் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. பணத்தின் மீது பேராசை கூடாது. இதன் அடையாளமாக,
* என் சவப்பெட்டியை மருத்துவர்கள் சுமக்கட்டும்.
* என் கைகள் விரிந்த நிலையில் வெளியே தெரியட்டும்.
* வழி நெடுக என்னால் கவரப்பட்ட தங்க நகைகளை வீசுங்கள் என்றார்.
உண்மை சுடும் என்பது இது தானோ...