ADDED : ஜூன் 20, 2025 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழைய சாமான்களை வாங்கி விற்கும் கடை ஒன்று இருந்தது. திருப்தியான வருமானம் பெற்ற நிலையில் போட்டி உருவானது. இதனால் லாபம் குறைந்து நஷ்டமாகத் தொடங்கியது. கடையின் உரிமையாளர் கவலை கொண்டார். அவரது மனைவி, 'கவலைப்படாதீர்கள். நாம் வேறு தொழிலில் ஈடுபடலாம்' என யோசனை சொன்னாள்.
அதன் பின் விறகுக்கடையைத் தொடங்கி மும்முரம் காட்டினார். லாபம் கிடைத்தது. ஆனால் எதிர்பாராமல் தீப்பிடிக்கவே மீண்டும் நஷ்டம் உண்டானது. வருத்தம் அடைந்த வியாபாரியிடம், 'எரிந்த விறகில் கிடைத்த கரியை விற்று லாபம் சம்பாதிக்கலாம்' என மனைவி ஆறுதல் சொன்னாள். துயரப்படுகிறவர் பாக்கியவான்; அவர்கள் ஆறுதலடைவர்; கவலை துரத்தும் போது ஆண்டவர் ஆறுதல் அளிப்பார்.