
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோல்வியை ஏற்க சிலர் தயங்குவார்கள். ஏனெனில் மற்றவர்கள் இழிவாக நினைப்பார்களோ என பயப்படுவதே காரணம்.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்க்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு இருந்தது. இருந்தாலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனை புரிந்தார். ஒருமுறை தன் நண்பரான ரஞ்சித் ராயிடம், 'மனிதர்களின் மனதை எல்லாம் இணைக்கும் சூத்திரத்தை கண்டுபிடித்து உலகை ஒன்றுபடுத்துவேன்' என சவால் விட்டார். ஆனால் பல வருட ஆராய்ச்சிக்கு பின் அந்த சூத்திரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தோல்வியை ஒப்புக்கொண்டார். தோல்வியை ஒப்புக்கொள்ள பெரிய மனசு வேண்டும்.