நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐரோப்பிய வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர் பதினான்காம் லுாயி. சிறந்த நிர்வாகியான இவர் தன் அதிகாரத்திற்கு உட்பட்ட நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில் நடக்கும் சிறு நிகழ்வையும் தனக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். உறவினர், நண்பர் யாருக்கும் சபையில் இடம் தரவில்லை.
ஆட்சி, அதிகாரத்தில் அவர்கள் தலையிட அனுமதிக்கவும் வில்லை. புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முன் பலமுறை யோசித்து செயல்பட்டார். ஆனால் மனைவிக்கு நல்ல கணவராக இவர் வாழவில்லை. இறக்கும் போது மறைந்த தன் தாயாரின் படத்தை பார்த்தபடி உயிர் விட்டார். இவரிடம் கற்க வேண்டிய படிப்பினை நிர்வாகத்திறமை என்றால் மிகையில்லை.கிழக்கு நோக்கி பயணிப்பவன் மேற்கு திசையை இழந்தாக வேண்டும் என்பது தானே விதி.