
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, அவர்களுடன் பேசுவதையோ யூதர்கள் தகுதி குறைவாக கருதினர்.
'நீங்கள் செய்வது தவறு' என இயேசு பலமுறை சொல்லியும் யூதர்கள் கேட்பதாக இல்லை.
ஒருமுறை பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக சமாரியப் பெண் ஒருத்தி வந்தாள். அவளிடம், 'அம்மா! தாகமாக இருக்கிறது.
தண்ணீர் கொடு'' என வாங்கி குடித்தார் இயேசு. இதை அறிந்த யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு 'அனைவரும் நம்மவரே' என சமாதான வார்த்தை சொன்னார்.