நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உவமை மூலம் மக்களுக்கு உபதேசம் செய்தார் இயேசு.
'தானியங்களை நடைபாதையில் துாவினான் ஒருவன். அது வழிபோக்கர்களின் காலில் மிதிபட்டது. பறவைகளுக்கும் உணவாக பயன்பட்டது. மற்றொருவன் பாறைகளின் மீது தானியத்தை துாவினான். சூரியஒளி பட்டு அவை கருகின. இன்னும் சிலர் துாவிய தானியங்கள் முட்புதருக்குள் விழுந்தன. முளைத்த போதிலும் அதன் வளர்ச்சி புதரால் தடைபட்டது. சிலர் துாவிய தானியங்களோ வயலில் விழுந்தன. பன்மடங்காக விளைச்சல் கிடைத்தது.
நடக்கும் பாதையில், பாறையில், முட்புதரில், நல்ல நிலத்தில் துாவிய தானியத்தைப் போல நீங்கள் எங்கு சேர்கிறீர்களோ அதற்கேற்ப உங்களின் வாழ்வு அமையும். யாராக இருக்க வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்கள்'' என்றார்.