நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரை உருவாக்க பல ஆண்டுகள் ஆனது. அதைக் கண்டு மகிழ வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். ''ஆகா! இதை விட மயக்கும் நகரத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது. எவ்வளவு அழகாக உள்ளது' என பாராட்டினர். அந்நகர மக்களுக்கு நம்மால் மட்டுமே சாதனை படைக்க முடியும் என்ற இறுமாப்பு வளரத் தொடங்கியது. ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினர்.
இதனிடையே 1906ம் ஆண்டு எதிர்பாராமல் கடல் சீற்றம் உருவானது. வானளாவிய கட்டடங்கள் அடையாளம் தெரியாமல் சின்னாபின்னமானது. இதன் பின், 'இயற்கையை விட சக்தி வாய்ந்தது ஏதுமில்லை. அதன் முன் மனித முயற்சி பெரிதல்ல' என்ற உண்மை புரிந்தது.