நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் டயோஜனிஸ் திடீரென பைத்தியம் போல சிரித்தார். அதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் ஒருவர், ''எதற்கு இப்படி சிரிக்கிறீர்கள்'' எனக் கேட்டார். ''தெருவின் நடுவில் கிடக்கும் கல்லை யாரும் அகற்றவில்லையே... உங்களுக்கு அக்கறை இல்லையே... என நினைத்து சிரித்தேன்'' எனச் சொல்லி அங்கிருந்த கல்லை அவரே அப்புறப்படுத்தினார்.
அலட்சியம் கூடாது. அக்கறையுடன் செயல்படு.