
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மன்னர் அலெக்சாண்டரிடம் நம்பிக்கைக்குரிய தளபதி ஒருவர் இருந்தார். நோயுற்ற அவரது மகனை பார்க்கச் சென்றார் மன்னர். அப்போது அவனது அறையில் இருந்து இளம்பெண் ஒருத்தி வெளியே செல்வதைக் கண்டார். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. அவனை நலம் விசாரித்த போது, 'மன்னா... என்னை விட்டு நோய் போய் விட்டது' என்றான் ஆர்வத்துடன்.
'ஆமாம், நான் வந்த போது தான் அது வெளியேறியது' என்றார் மன்னர் கிண்டலாக. தளபதியும் மகனை உற்றுப் பார்த்தார். அவனும் தவறை உணர்ந்து தலைகுனிந்தான். ஒழுக்கக் கேட்டை முளையிலேயே கிள்ளி எறி.