
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடைப்பந்து விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டான் சொல்வதை கேளுங்கள். 'என் விளையாட்டு வாழ்க்கையில் ஆயிரமாயிரம் முறை கூடையில் பந்தைப் போட முயற்சி செய்தும் தோல்வி அடைந்திருக்கிறேன். விளையாட்டின் முடிவைத் தீர்மானிக்கும் பந்து வீச்சை என்னை நம்பி பலமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பந்தைக் கூடையில் போடாமல் சகவீரர்களை அத்தனை முறையும் ஏமாற்றி இருக்கிறேன். அந்த தோல்விகளில் பெற்ற அனுபவமே என்னை தலைசிறந்த விளையாட்டு வீரனாக்கியது. தோல்வி என்னும் படிக்கட்டுகளில் ஏறாமல் வெற்றிக் கொடியைக் கட்ட யாராலும் முடியாது' என்றார்

