நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓரிடத்தில் இத்தனை மணிக்கு அன்னதானம் அளிக்கப்படும் என அறிவிப்பு இருந்தால் போதும். உதவி செய்யும் நபரைப் பற்றிய தகவல் தேவையில்லை. 'தர்மம் செய்யும் போது அது குறித்த விஷயங்கள் ரகசியமாக இருக்கட்டும். வலதுகை செய்வதை உன் இடது கை அறிய வேண்டாம்' என்கிறது பிரபல வசனம்.
சூரியன் பகலில் ஒளி தருகிறது. அதிகாலையில் பூக்கள் மலர்ந்து நறுமணம் கமழ்கிறது. பருவ காலத்தில் மரங்கள் சுவை மிக்க பழங்களைத் தருகின்றன. உணவோடு சேர்ந்த உப்பு சுவையைக் கூட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் தன்னை புகழ வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. கடமையைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்கின்றன. ஆனால் மனிதரில் சிலரோ சிறுஉதவியைச் செய்தாலும் அதை விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்பட்டவரை ஆண்டவர் விரும்புவதில்லை.

