ADDED : நவ 27, 2025 11:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டேவிட் காப்பர்பீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற நாவல்களை எழுதியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் டிக்கன்ஸ். தெருவில் இவர் சென்ற போது பிச்சைக்காரன் ஒருவன் பணம் கேட்டான். அவரிடம் பணம் இல்லை.
இருந்தாலும் அவனது தோளில் கை வைத்து, 'சகோதரா... கவலைப்படாதே, விரைவில் எல்லா நன்மைகளையும் அடைவாய்'' என நம்பிக்கையாக பேசினார். அதற்கு அவன், 'என்னைச் சகோதரா... என கூப்பிட்ட போதே பசி நீங்கி விட்டது' என மகிழ்ச்சியுடன் சொன்னான். அன்பான வார்த்தை ஒருவரின் துன்பத்தைப் போக்கும்.

