நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புலி ஒன்று துரத்துவது போவும், அதைக் கண்டு அவன் ஓடுவது போலவும் சிறுவன் யோவான் கனவு கண்டான். புலிக்கும் அவனுக்கு இடையே உள்ள துாரம் குறைய ஆரம்பித்தது. பயம் வாட்டியது. கத்த ஆரம்பித்தான். கனவும் கலைந்தது. எழுந்து உட்கார்ந்தான். உடம்பெங்கும் வியர்க்கவே, துணியால் துடைத்தான். மீண்டும் துாங்கினான். கனவில் வந்த புலியைக் கண்டு பயந்தது போல நாமும் மாய உலகில் சிக்கி துன்பப்படுவதாக நினைக்கிறோம். ஆனால் அது நிரந்தரம் அல்ல.

