நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நண்பர்களான அறிவாளி, வியாபாரி, தொழிலாளி ஆகிய மூவரும் அவ்வப்போது சந்திப்பதுண்டு. ஒருமுறை அவர்கள், 'ஆள் இல்லாத தீவில் சிக்கினால்... ' என்பது பற்றி விவாதித்தனர். 'நான் புத்தகம் படிப்பேன்'என்றார் அறிவாளி. 'தீவு மூலம் பணம் பண்ணலாமா என யோசிப்பேன்' என்றார் வியாபாரி.
ஆனால் தொழிலாளியோ, 'தப்பிப்பதற்கு படகு செய்வேன்' என்றார். உயிர் பிழைப்பது முக்கியம். இங்கு படிப்பும், பணமும் உதவாது. சூழ்நிலைக்கு தக்கபடி மனிதன் செயல்படுவது அவசியம்.

