நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலில் வலையை வீசி மீனவர்கள் மீன் பிடிப்பர். அதில் தரமான மீன்களை கூடைகளில் சேகரிப்பர். தரமற்றதை புறக்கணிப்பர். இதைப் போலவே உலகின் முடிவு நாள் நிகழ்ச்சியும் அமையும். நேர்மையானவர்களை எல்லாம் வானதுாதர்கள் சேகரிப்பர். ஆனால் கெட்டவர்களை எல்லாம் நெருப்புச் சூளையில் தள்ளுவர். அழுதாலும் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
இயேசு சொன்ன உவமைக் கதையில் இதுவும் ஒன்று. உலகத்தின் முடிவு நாளில் நடக்கும் தீர்ப்பு பற்றி இக்கதை விளக்குகிறது.

