நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீசர் தன் அலுவலகத்தில் சக பணியாளர் சிலருக்கு நான்கு லட்டு வாங்கி வந்தார். மதிய உணவின் போது மற்ற பிரிவுகளைச் சேர்ந்த பலரும் அதே இடத்தில் உணவருந்த அமர்ந்திருந்தனர். அப்போது அனைவருக்கும் லட்டை பகிர்ந்தளித்தார். அப்போது அந்த அலுவலகத்தைச் சேர்ந்த பகுதிநேரப்பணியாளர் ஒருவர் அங்கு உணவருந்த வந்தார். அவர் தினமும் விதவிதமான உணவுகளை வீட்டில் இருந்து எடுத்து வருவார். தானே தனியாக உண்பார். அப்படிப்பட்ட அவர், ''எனக்கு மட்டும் லட்டு தரவில்லையே'' எனக் கேட்டார். இதைக் கேட்ட மற்றவர்கள் முகம் சுழித்தனர். மற்றவருக்கு பகிர்ந்து கொடுத்து உண்பது நல்ல பண்பு.