நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு முறை சான் பிரான்சிஸ்கோவில் திடீர் என ஏற்பட்ட நில அதிர்ச்சியால் பெரிய கட்டடங்கள் எல்லாம் நொறுங்கின. அந்நகர மக்கள் மிகவும் துன்பப்பட்டனர்.
அதை அறிந்த பாதிரியார் ஒருவர், '' இந்த நகரத்தை உருவாக்க நுாறு ஆண்டுகள் ஆனது. ஆனால் எல்லாம் ஒரு நொடிக்குள்ளே தரை மட்டமானது. ஆண்டவர் எதற்கு எச்சரிக்கை செய்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அவரை விட பெரியவர் எவரும் இல்லை. அறிவியல் வளர்ச்சியால் மனிதர்கள் ஆணவம் கொண்டு அலைகிறார்கள். விஞ்ஞானிகளே... அவரை விட யாரும் வலிமையானவர்கள் அல்ல'' என்றார்.