நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உண்பதும் உறங்குவதும் ஒரு இனிய அனுபவம். பசியும் துாக்கமும் போல படிக்கும் ஆர்வமும் குழந்தைகளுக்கு இயல்பாக வர வேண்டும். ஆனால் அப்படி இயல்பாக படிப்பவர் ஆயிரத்தில் ஒரு குழந்தையாக வேண்டுமானால் இருக்கலாம். ஆரம்பத்தில் இருந்தே கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி குழந்தைகளை வளர்க்க வேண்டும். கல்வியை கட்டாயமாகத் திணிக்கும் போது எரிச்சலும் விரோதமும் உண்டாகும். கல்வியின் அவசியத்தை எடுத்துச் சொல்லி அக்கறையுடன் படிக்க வைப்பது பெற்றோரின் கடமை. அக்கறையுடன் படியுங்கள். தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுங்கள்.