ADDED : மார் 01, 2024 02:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஞ்சு மில் பணியாளர்கள் தங்களுக்குரிய குடியிருப்பு பகுதியில் வசித்தனர். காலை, மாலை, நள்ளிரவு என ஷிப்ட் முறைப்படி பணிபுரிவர். பணி ஆரம்பிப்பதற்கும், முடிவதற்கும் பத்து நிமிடம் முன்பாக சங்கு ஒலிக்கும். அந்த ஒலி அங்கு குடியிருப்பவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் பணியாளர்கள் அதைக் கேட்டதும் பணிக்குச் செல்ல தயாராக வேண்டும் என்ற விழிப்புணர்வைப் பெறுவர்.
இப்படி உழைப்பின் அருமையை உணர்ந்து பணியாற்றும் ஒவ்வொரு நாளும் நல்ல நாள் என்றால் மிகையில்லை. அது போல தேவ குழந்தைகளாகிய நாம் பொழுது புலரும் போதே அன்று செய்ய வேண்டிய கடமைகளை திட்டமிட்டு செயலாற்றினால் அந்த நாள் இனிமையாக கழியும். கடமையறிந்து பணியாற்றும் நாள் எல்லாம் நல்ல நாளே.