நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தோஷம் பற்றி பேச ஆரம்பித்த பேச்சாளர் ஒருவர் புதிய செய்தி ஒன்றைச் சொல்ல அதை அனைவரும் ஆர்வமாய் கேட்டனர். சிறிது நேரம் கழித்து அதே செய்தியை மீண்டும் சொன்னார். அங்கிருந்த சிலர் மட்டும் கேட்டனர். பின்னர் மூன்றாவது முறையாக அவர் சொன்ன போது யாரும் அதை பொருட்படுத்தவில்லை. அரங்கம் கலகலப்பானது.
அப்போது அவர், ''ஒரே செய்தி தான். ஆனால் அதை முதலில் கேட்கும் போது அதிக ஆர்வம் உண்டானது. அதையே திரும்ப கேட்கும் போது இதை தான் சொல்ல வருகிறார் என யூகித்து இருப்பீர்கள். மூன்றாவது முறையாக கேட்கும் போது சலிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். இதுபோலவே எந்த செயலானாலும் முதலில் உண்டாகும் ஆர்வத்துடனே அதில் ஈடுபடுங்கள். சந்தோஷம் அதிகரிக்கும்''என்றார் பேச்சாளர்.