நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு நிலத்தையோ, விலையுயர்ந்த பொருளையோ வாங்க முன்பு டெட்டெலெஸ்டாய் (tetelestai) என்ற சொல்லை பயன்படுத்தினர். இது ஒரு கிரேக்கச்சொல். இதனை தமிழில் 'முடிந்தது' என்றும், ஆங்கிலத்தில் பெய்டு என்றும் சொல்வர். கடைகளில் நாம் விலை கொடுத்து வாங்கப்படும் பொருளுக்குரிய பில்லில் (paid) என அச்சிட்டுத் தருவர். அதன் பின்னரே வாங்குபவர் பயன்படுத்தவும், உரிமை கொண்டாடவும் முடியும். அது போல சிலுவையில் அறையப்பட்ட போது ஆண்டவர் 'முடிந்தது' என்று வார்த்தையை சொன்னார். அதற்கு பல அர்த்தம் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை...
* நீங்கள் செய்யும் பாவத்திற்கு நான் முழுவிலை கொடுத்து முடிந்தது.
* உலக வாழ்க்கையில் இருந்து என் பணி முடிந்தது.
* பரமண்டலத்தில் இருந்து எனக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்தது.