நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீச்சிற்கு உடனே போகலாம் என கணவன் சொல்ல, மனைவியும், குழந்தையும் மகிழ்ச்சி அடைந்தனர். மனைவி உடனே சமையல் அறைக்குள் சென்று உணவு தயார் செய்தாள். அதை பார்த்த குழந்தை நாம் தான் வெளியில் செல்கிறோமே பின் எதற்கு... எனக் கேட்டது. அதற்கு அவளோ! நம்ம வீட்டு வேலைக்காரி பசியோடு வருவாள். அவள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் சமைக்கிறேன் என்றாள். அம்மாவின் இரக்கத்தை பார்த்து கட்டி அணைத்தது குழந்தை.