நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துன்பத்தில் தவிக்கும் போது, 'உலகத்தை ஏன் படைக்க வேண்டும்? உயிர்களை ஏன் வருத்த வேண்டும்?”என ஆண்டவர் மீது சிலர் கோபம் கொள்வர்.
மனிதர்கள் தம்மை மகிமைப்படுத்துகிறார்களா என்பதை அறிய படைக்கும் போதே நமக்கு சுதந்திரம் அளித்தார். அதே நேரத்தில் சில விதிமுறைகளால் கட்டுப்படுத்தவும் செய்தார். குறிப்பிட்ட ஒரு மரத்தின் கனியை சாப்பிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் விஷக்கனியைச் சாப்பிட்ட மனிதன் துன்பத்திற்கு ஆளானான். பின்னர் ஆண்டவரைக் குறை சொல்வது நியாயமா? மனித வடிவில் இந்த மண்ணில் தோன்றி ஆண்டவர் பரிசுத்தமாக்கினார்.
அதன் பிறகும் பாவத்தின் பாதையில் சென்றால் யார் அதற்கு பொறுப்பு? வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு அவரவரே பொறுப்பு.