நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலெக்சாண்டர் முன்பு அவரது உருவத்தை ஓவியமாக வரைந்தார் ஒருவர். மன்னரின் முகத்தில் இருந்த தழும்பு அவரது அழகை குறைப்பதாக உணர்ந்தார் ஓவியர்.
உடனே சமயோஜிதமாக முகத்தில் கை வைப்பது போல ஓவியத்தை மாற்றி மன்னரிடம் கொடுத்தார். அதை பார்த்த அலெக்சாண்டர், ' என் கன்னத்தில் தழும்பு இல்லாதபடி வரைந்து விட்டாயே?' எனக் கேட்க, 'உங்கள் மீதான அன்பு அதை மூடி விட்டது' என பதிலளித்தார்.
'அன்பு திரளான பாவங்களை மூடும்; சாந்தமும், தயவும் கொண்டது அன்பு. அது பொறாமைப்படாது. தன்னைப் புகழாது. இறுமாப்பு கொள்ளாது'.