
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய் ஒன்று மைக்கேல் வீட்டுத்தோட்டத்தில் ஆறு குட்டிகளை விட்டுச் சென்றது. அவரது மனைவி பலரிடம் எடுத்துச் கொள்ளச் சொன்னாள். யாரும் முன்வர வில்லை. கணவனிடம் இதை சொன்ன போது உயர் ரக நாய்குட்டிகள் உள்ளது என விளம்பரப்படுத்தினார்.
அதைக்கண்ட பலர் நாய்குட்டிகளை வாங்கவந்தனர். நாய்குட்டி ஒன்றுக்கு ஆயிரம் வீதம் விற்றார். திருப்தி தானே என மனைவியிடம் மைக்கேல் கேட்டார். புன்னகை செய்த அவள் உங்களுடைய திறமைக்குத் தான் அந்த பிரபல நாளிதழ் விளம்பர பிரிவில் பணி செய்கிறீர்கள் என்றாள்.

