நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடற்கரையோர கிராமத்து இளைஞர்கள் சேவை அமைப்பு ஒன்றை உருவாக்கினர். படகு ஒன்று புயலில் சிரமப்படும் செய்தி கேட்டு மீட்கச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் கரைக்கு வந்த அவர்கள், ''ஒருவர் மட்டும் படகில் உள்ளார். நாங்கள் அவரை அழைத்து வந்திருந்தால் எங்கள் படகு கடலில் மூழ்கி இருக்கும். நாங்கள் சோர்வாக உள்ளோம். அவரை மீட்க வேறு யாராவது செல்லுங்கள்'' என்றனர்.
கரையில் நின்ற சிறுவன் ஒருவன் நான் செல்கிறேன் என புறப்பட்டான். அதைக்கேட்ட அவனது தாய் இப்படித்தான் உன் அண்ணன் காணாமல் போனான். நீயுமா என்றாள். தாய்க்கு தைரியம் சொல்லி விட்டு கிளம்பியவன் அந்த நபருடன் வந்தான். அவன் வேறு யாருமல்ல. காணாமல் போன அவனது அண்ணன் தான்.
பார்த்தீர்களா... துணிவுடன் செயல்பட்டால் இழந்ததும் கூட கிடைக்கும்.