நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படிப்பறிவு இல்லாத மீனவனின் வலையில் மாட்டிக் கொண்டது ராணி மீன். என்னை விடுவித்தால் வரம் ஒன்று தருவேன் என சொன்னது. அதை விடுவித்த அவன், வரம் பற்றி வீட்டில் கேட்டு இதே நேரத்தில் நாளை வருகிறேன். நீயும் வந்து விடு என சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றான். விபரம் அறிந்த தாய் எனக்கு பார்வையை கேள் என்றாள். தந்தையோ மாடி வீடு வேண்டும் என்றார். அவனது மனைவியோ குழந்தை வரம் வேண்டும் என்றாள்.
அனைவருடைய விருப்பத்தையும் கேட்டு யோசித்த மீனவன் 'மாடி வீட்டில் இருந்து என் பெற்றோர்கள் என் குழந்தை விளையாடுவதை பார்க்க வேண்டும்' என்ற வரத்தை மீனிடம் இருந்து வாங்கினான் மீனவன். அன்பு இருந்தால் எல்லாம் அவருக்கு வந்து சேரும்.