ADDED : ஜன 26, 2022 03:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூச்சிகளை உணவாக கொள்ளும் தாவரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...
நெபந்தஸ் அழகானதொரு தாவரம். இலையின் மத்திய நரம்பிலிருந்து ஒரு நீண்ட பாகம் வளர்ச்சி அடைந்து, ஜாடி போன்று காணப்படும். அதற்கொரு மூடியும் உண்டு. ஜாடியின் வாய் பாகத்தில் இனிப்பான திரவம் ஒன்று சுரக்கின்றது. அதை குடிக்க வரும் பூச்சிகள் வழுக்கி ஜாடியின் அடிப்பாகத்தில் விழுந்து விடுகிறது. அப்போது ஜாடியின் மூடி தானாகவே மூடிக்கொள்ளும்.
பிறகு என்ன.. பூச்சி சிறுது நேரத்தில் இறந்துவிடும். ஜாடிக்குள் இருக்கும் இன்னொரு திரவம் பூச்சியை செரித்து, செடிக்கு உணவாக மாற்றிவிடுகிறது.
இதைப்போல்தான் பாவமும் முதலில் இன்பமாக காணப்படும். அதிலே வழுக்கி விழுந்துவிட்டால் நம் வாழ்க்கையையே நாசமாக்கிவிடும். எனவே பாவங்களை செய்யாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள்.