
என்னதான் உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா என சிலரின் செய்கையை பார்த்து அவர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. ஏன் அப்படி சொன்னார்கள் என சிந்தித்தால் அதன் பொருள் தெளிவாக புரியும்.
வானில் பறக்கும் கழுகின் மீது காகம் அமர்ந்து கொண்டு அதனுடைய அலகுகளால் கழுகின் கழுத்தை தொடர்ந்து கொத்திக்கொண்டே இருக்கும். ஆனால் அச்செயலை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக உயரே பறந்து கொண்டே இருக்கும் கழுகு. குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே காகத்தால் சுவாசிக்க முடியாமல் கீழே விழுந்து விடும். இதைப்போலத்தான் ஒவ்வொரு மனிதர்களும் அவரவருக்குரிய தகுதிக்கு மீறி செயல்களை செய்வார்கள். அவர்கள் கழுகினைப்போல பொறுமையாக இருந்து திறமையாக செயல்பட வேண்டும். இதைத்தான் தொடக்கத்தை காட்டிலும் முடிவு சிறப்பானது. பொறுமையற்றவனை காட்டிலும் பொறுமையுள்ளவன் உத்தமன் என்கிறது பைபிள்.

