
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிளியை வைத்து பிழைப்பவர்கள் முதலில் அதன் சிறகினை வெட்டி விடுவர். ஒவ்வொரு முறை முயற்சித்தும் அதனால் பறக்க இயலாது.
சிறகு வளர்ந்த பிறகும் கூட பறந்து செல்ல முயற்சி எடுக்காது. அது போல சுயமுயற்சியால் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பவர்கள் அவர்களுக்கான தகுதியை அடையும் வரை தளர்ந்தும் சோர்ந்து விடக்கூடாது. மழை இல்லாவிட்டாலும் நிலத்தை உழுது கொண்டு இரு என இக்கருத்தை மனதில் வைத்துத்தான் கிராமத்தில் பேசுவர்.
வேலை செய்யாத கைகள் வறுமையை உண்டாகும். முயற்சி எடுக்கும் கைகள் செல்வத்தை வருவிக்கும் என்கிறது பைபிள்.

